×

ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை : ஹிஜாப் விவகாரம் பற்றி வைரமுத்து ட்வீட்!!

சென்னை : கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் சீருடையை மட்டுமே அணிந்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதால், அவர்களை எதிர்த்து மற்ற மாணவிகள், மாணவர்கள் காவி சால்வை அணியும் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது  ட்விட்டர் பக்கத்தில், ‘கல்வியின்நோக்கங்களுள் ஒன்றுபிரிந்துகிடக்கும் சமூகத்தைஒருகூரையின் கீழ்ஒன்றுபடுத்துவது;ஒன்றுபட்ட சமூகத்தைஇரண்டுபடுத்துவது அல்லஆடை என்பது மானம்;எந்த ஆடை என்பது உரிமைஇரண்டையும் பறிக்க வேண்டாம்இஸ்லாம் என்பதுஇந்தியாவில் தான் சிறுபான்மைஒடுக்க வேண்டாம் ‘ என்று பதிவிட்டுள்ளார்….

The post ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை : ஹிஜாப் விவகாரம் பற்றி வைரமுத்து ட்வீட்!! appeared first on Dinakaran.

Tags : viramuthu ,Chennai ,Karnataka ,
× RELATED சென்னையில் கார்களில் கடத்திய 764 கிலோ குட்கா பறிமுதல்..!!